பேட்டை தொட்டு 3 மாசம்
லாக்டவுன் முடிந்து மீண்டும் விளையாட்டுக்குத் திரும்பும்போது பேட்ஸ்மேன்களுக்குத்தான் நிறைய சிரமம் ஏற்படும் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
கொரோனாவைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் உள்ளது. இதனால் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. வீரர்களும் குடும்பத்தினருடன் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில் முகம்மது ஷமியுடன் இன்ஸ்டாகிராமில் லைவ் சாட்டில் கலந்து கொண்டு பேசினார் ரோகித் சர்மா. அப்போது லாக்டவுனுக்குப் பிந்தைய நிலை குறித்து அவர் பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஒன்றரை மாத தீவிரப் பயிற்சிக்குப் பிறகுதான் வீரர்களால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். எந்த வீரராக இருந்தாலும் பயிற்சி அவசியம். 3 மாதத்திற்கும் மேலாகி விட்டது பேட்டை தொட்டே. எனவே மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப அவகாசம் அவசியமாகும். எல்லோருக்கும் இதே நிலைதான். எனவேதான் பயிற்சி அவசியம் என்று நான் சொல்கிறேன் என்றார் ரோகித் சர்மா.