`பொறாமையா…இல்லவே இல்ல; ஆஸ்திரேலியாவின் குணம்!’

“பலரும் நான் ஏதோ பொறாமையில் செயல்படுகிறேன் என நினைக்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக் கொள்ளட்டும். நான் உங்களிடம், (அஷ்வின்) சொல்ல விரும்புவது இதுதான்…” – ஹர்பஜன்

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியதும் லாக்டெளன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் களத்தில் விளையாடிய வீரர்கள் பலரும் வீட்டிலே லாக் ஆனார்கள். பலரும் இந்த நேரத்தில் தங்களை சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் ஆக்ட்டிவாக வைத்திருந்தனர். இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் முக்கியமானவர்.

இன்ஸ்டாகிராமில் ‘ReminiscewithAsh’என லைவ்வின் பல்வேறு நபர்களிடம் பேசி வருகிறார் அஷ்வின். அண்மையில் திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடமும் கிரிக்கெட், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எனப் பல விஷயங்கள் குறித்து பேசினார். தற்போது அவர் ஹர்பஜன் சிங் உடன் நடத்திய லவ் உரையாடல் செம ஹிட் அடித்திருக்கிறது.

அஷ்வின் இந்திய கிரிக்கெட் அணிக்குள் வந்த பின்னர்தான் ஹர்பஜன் சிங் ஓரங்கட்டப்பட்டார் என்ற பேச்சு பொதுவாகவே இருக்கும். இந்த நிலையில்தான் இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின்போது ஹர்பஜன் இதுதொடர்பாக மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அவர், “பலரும் நான் ஏதோ பொறாமையில் செயல்படுகிறேன் என நினைக்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளட்டும். நான் உங்களிடம், (அஷ்வின்) சொல்ல விரும்புவது இதுதான். தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களில் சிறந்த ஆஃப்- ஸ்பின்னர் நீங்கள்தான். ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் சிறப்பாகச் செயல்படுகிறார். வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் அவரது ஆட்டம் சிறப்பானதுதான்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *