70 வயது முதியவரான பிரபல தமிழ் நடிகர் – ஷாக்கிங் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் ‘கயல்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சந்திரன். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து ரூபாய், திட்டம் போட்டு திருடுற கூட்டம், பார்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதையடுத்து தனது வாழ்வின் அடுத்தகட்டத்தை நோக்கி பயணித்த சந்திரமௌலி. பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி அஞ்சனாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.   இவருக்கு ருத்ராக்ஸ் என்கிற மகன் இருக்கிறான். இந்நிலையில் தற்போது  கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் அஞ்சனாவும் அவரது கணவர் சந்திரன் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர்.   அந்தவகையில் தற்போது நடிகர் சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 70 வயதான முதியவர் போல் மாறியுள்ள ஃபோட்டோவை வெளியிட்டு ” ”2020 ஆண்டின் இறுதி இப்படித் தான் இருக்கும்” என்று கூறி தெரிவித்துள்ளார். ஒரு நிமிடம் இவர் யார் என்றே அடையாளம் தெரியாத இணையவாசிகள் பின்னர் சுதாரித்துக்கொண்டு ” அண்ணா என்ன பண்ணி வச்சிருக்கீங்க ” என ஷாக்காகி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *