பிரபாஸுக்கு வில்லனாக மாறும் அரவிந்த்சாமி !!

பிரபாஸ் நடித்த சாஹோ படம் கடந்த ஆண்டு வெளியானது. இப்போது ஜான் என்ற படத்தில் நடிக்கிறார். இதை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தை தேசிய விருது பெற்ற மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்குகிறார் என்கிற செய்தி இரண்டு மாதங்களுக்கு முன் வெளியானது. பிரபல தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி பிலிம்ஸ் தங்களது 50ஆம் ஆண்டு பொன்விழா தயாரிப்பாக இந்த படத்தை தயாரிக்கிறது.   இந்தப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது. காரணம் இந்தப்படத்தில் வில்லனுக்கும் பவர்புல் வேடமாம்.. தனி ஒருவன் படத்தின் மூலம் வில்லனாக வெற்றிக்கொடி நாட்டிய அரவிந்த்சாமி, அதன் ரீமேக்காக தெலுங்கில் ராம்சரண் நடித்த துருவா’ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *