கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனை எட்டவுள்ளது!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனை எட்டவுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு 3,917,531பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலக அளவில் 270,720 உயிரிழந்துள்ளனர். மேலும், 1,344,120பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.

அங்கு இதுவரை 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஏனைய நாடுகளில் வைரஸ் தொற்று சற்று கட்டுப்படுத்தப்பட்டாலும் ரஷ்யா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளில் வைரஸ் தொற்று மிகவேகமாக பரவிவருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸின் தாயகம் என வர்ணிக்கப்படும் சீனாவில், வைரஸ் தொற்று வீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு சில பகுதிகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *