தம்பிலுவில் கண்ணகி அம்மன் திருக்குளிர்த்திச் சடங்கு

கிழக்கிலங்கையில் வைகாசி மாதம் என்பது அம்மன் குளிர்த்தி கண்ணகிக்கு உரியது. அங்கு அமைந்துள்ள பழம்பெரும் கண்ணகி ஆலயங்களில் எல்லாம் ‘திருக்குளிர்த்திச் சடங்கு’ என்று அழைக்கப்படும் கண்ணகி விழா இம்மாதத்தில் ஆரம்பமாகும். அங்குள்ள கண்ணகி கோயில்களில் பழைமை வாய்ந்ததும் புகழ் மிக்கதுமான கண்ணகி அம்மன் கோயில்களில் ஒன்றாக தம்பிலுவில் கண்ணகியம்மன் ஆலயம் காணப்படுகின்றது. 17ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த கண்டிமன்னர்கள் நரேந்திரசிங்கன், இராஜசிங்கன் முதலியோர்தொடர்பு கொண்டிருந்த பழம்பெரும் கோவில் இது. “உன் நாட்டில் பக்தி மிகுந்த ஊரிலேயே தான் குடியிருப்பேன்” என்ற கண்ணகியின் ஆணைப்படி கண்டி ராசனால்அனுப்பப்பட்ட ஏடகம் (தேர்) தானாகத் தரித்து நின்ற முதல் ஊர் தம்பிலுவில்.

தம்பிலுவில் அம்மன் கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ள மடாலயம் ஆகும். கேரளப்பாணியில் ஓடு வேய்ந்து கலசம் பொருத்திய கருவறைக் கூரை, இக்கோவிலின் தனித்துவம்.

கருவறையில் உள்ள மூலவர் சிலை ஒன்றரையடி உயரமானது. ஐம்பொன்னாலானது. அள்ளிமுடிந்த கொண்டையும் ஒரு கையில் வேப்பங்குழையும் அரைவிழி மூடிய திருமுகமுமாக எழிற்காட்சி தருவது. அதன் அருகே அஞ்சல், அருளல், வேப்பங் குழை, சிலம்பு என்பன தாங்கிய நான்கு திருக்கரங்களுடன் அம்மனின் எழுந்தருளி மூர்த்தம் வீற்றிருக்கிறது. ஆனால் சடங்கு காலத்தில் மூன்றாவதாக, வேப்பங்குழை யும் கமுகம்பாளையும் வைத்து அலங்கரிக்கப்படும் அம்மன் முகக்களையிலேயே அவள் எழுந்தருள்வதாக நம்புகிறார்கள். வீதியுலா, ஊர்வலம் எல்லாவற்றிலும் எழுந் தருளிக்கு முன்புறமாக அம்மன் முகக்களை உலாப் போவது வழமை.

இந்தக் கருவறையும் நடுமண்டபமும் விழாக்காலங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் பூட் டப்பட்டே இருக்கும். மற்றைய நாள்களிலெல்லாம் பூட்டப்பட்டிருக்கும் கண்ணகி கோவில்கள் இந்தக்குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே திறந்திருக்கும் என்பதால் தான், குளிர்த்திச்சடங்கு ஆரம்பமாவதை “கதவு திறத்தல்” என்று சொல்கிறார்கள்.

கோவிலுக்கு வடகிழக்கே பழைய கிணறு அமைந் திருக்கிறது. பீடைநாசினிகள் கண்டறிய முன்னர், வயல்களில் களைகளையும் பூச்சி களையும் கட்டுப்படுத்த உள்ளூர் விவசாயிகளால் பயன்பட்ட மருந்து இந்தக் கிணற்றின் நீர்தான். இன்றும் தீராத நோய் தீர்க்கும் தீர்த்தமாக நம்பப்பட்டு இக்கிணற்று நீரில் நீராடி அடியவர்கள் அம்மையை வணங்கி வழிபடுவதுண்டு.

கண்ணகிக்கென நிகழும் குளிர்த்திச் சடங்கு, அவள் மதுரையை எரித்த பின்னர் அடியவர்களால் குளிர்விக்கப்பட்டு சீற்றம் தணிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஐதீகத்துடன் தொடர்புடையது. பேச்சுவழக்கில் ‘குளுத்தில்’ என்பார்கள். கோடை மிகுகின்ற காலமான வைகாசியில், இயற்கையை தாய்த் தெய்வமாக உருவகித்த ஆதிமனி தனின் மனம், அந்தத் தாய்த் தெய்வத்தை இரந்து வேண்டி குளிரக்கோரிய பழங்குடிச் சடங்கின் தொடர்ச்சியாக குளுத்திலைக் காணலாம். தம்பிலுவில் சடங்கு, வற்றாப்பளையோடு ஒத்துப்போகும் விதத்தில்ஆரம்பமாகிறது.

வைகாசிப்பூரணையை அண்டி வரும் குறித்த செவ்வாய்க் கிழமை அதிகாலை கோயிலின் கதவு திறக்கப்படுகிறது. இதில் கப்புகனார் (பூசகர்) அம்மனைக் குற்றம் குறை வாராமல் வேண்டி பழிகிடத்தல், வண்ணக்கரை (தர்மகர்த்தா) திறப்புக்கொத்துடன் வீட்டிலிருந்து அழைத்துவரல் உள்ளிட்ட பல மரபுகள் உள்ளன. கதவு திறந்து ஏழு நாளும், பெண்களின் குரவையால் நிரம்பியிருப்பது இக்கோயிலின் அழகு.

கதவு திறந்ததிலிருந்து ஏழு நாளும் அம்மனுக்கு மடைப்பெட்டி கொடுப்பது வழக்கம். அரிசி, கமுகம்பாளை, வெற்றிலை, பாக்கு வைத்து, ஊருக்கு வந்திருக்கும் அம்மாளுக்கு உபசாரமாகக் கொடுக்கப்படும் பெட்டிதான் மடைப்பெட்டி. நேர்த்தி வைத்தவர்கள் மடைப்பெட்டியுடன் சேர்த்து தென்னம்பிள்ளை, சேலை, நகை, கற்பூரச் சட்டி, அடையாளங்கள், முதலியவற்றை யும் கொடுப்பதுண்டு.

இரண்டாம் நாளிலிருந்து தினமும் மதியச் சடங்கு பூசையும், இரவுச் சடங்கு பூசையும் என இருவேளை பூசை நிகழும். இரவுச்சடங்குக்குப் பின் அம்மன் திருவீதியுலாவும் இடம்பெறும். தினமும் கண்ணகியின் வர லாற்றைப் பாடும் ‘கண்ணகி வழக்குரை’ எனும் நாட்டார் இலக்கியம் பாடப்படுவது வழமை. சடங்குப்பூசை முடிந்த தும் வழங்கப்படும் பாணக்கம் இக்கோ விலின் முக்கியமான பிரசாதம். பாணக்கம் வாங்குவதற்கு அடியவர்கள் முண்டியடிப் பார்கள். பாணக்கம் என்று இங்கு சொல்லப் படுவது பஞ்சாமிர்தம்தான்.

குளுத்தில் சடங்கில் முக்கியமான நாட்கள் இறுதி இரு தினங்களான ஞாயிறும் திங்களுமே. னாயிறு மதியம், கலயாணக்கால் நாட்டும் சடங்காகும். கண்ணகி வழக்குரையில் அன்றைக்குப் பாடவேண்டிய பாடல்கள் நிறுத்தப்பட்டு, கோவலன் கண்ணகி திருமணப்பாடல்களே பாடப்ப டும். இளநீர்க் குரும்பைகள், பட்டுச்சேலை கள், முத்துமாலைகள் கொண்டு இளங்கன் னியும் அவளது நான்கு தோழியரும் போல கல்யாணக்கால்களை அலங்கரிப்பது மரபு.

அன்று அம்மன் ஊர்வலம் வரும் நாள். அன்றிரவு ஊரே விழாக்கோலம் பூண்டி ருக்கும். ஏடகத்தில் வரும் அன்னையை சந்திக்கு சந்தி அலங்காரப் பந்தல்கள் கட்டி வீட்டுவாசல்களில் நிறைகுடம் வைத்து வர வேற்பார்கள். ஊரின் முக்கிய சந்திகளில் ‘பள்ளுக்கு வளைதல்’ எனும் கலையாடல் நிகழ்வதுண்டு. தென்னோலையை எரித்து அதைச்சுற்றி அம்மன் பள்ளு எனும் இலக் கியத்தைப் பாடி ஆண்கள் கைகொட்டி ஆடுவது பள்ளுக்கு வளைதல். இது அம்மனுக்கு கண்ணூறு கழிப்பதற்காகச் செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

திங்கள் இரவு வைகாசிப்பொங்கல்.நேர்த்தி வைத்தவர்கள், கோயில் வளாகம் முழுதும் பானை வைத்துப் பொங்குவார்கள். அன்றிரவு நள்ளிரவு கடந்தபின்னர் குளுத்தில் ஆரம்பமாகும். கப்புகனார் சேலையில் மறைத்தபடி அம்மனைக் கொணர்ந்து குளுத்தில் சட்டியில் வைக்க, நியமிக்கப்பட்ட அடியவர்கள் இருவர், குளிர்த்திக்காவியம் பாடுவார்கள். அதிகாலை வேளைக்குரிய நிசப்தமும், அரி வையரின் குரவையூடே அம்மானைக்காய் கள் சிணுங்குவதும், சிலம்பு கிலுக்குவதும், அசாதாரணமான உளநிலைக்கு நம்மை இட்டுச் செல்லும்.

குளுத்திலாடி முடிந்ததும் ‘பணிமா றல்’ எனும் சடங்கு இடம்பெறுவதுண்டு. அம்மனுக்கு நேர்த்தியாக வந்த மூன்று சேலைகளை அடுத்தடுத்து உடுத்து, கப் புகனார் சிலம்பு கிலுக்கியபடி வலம் வருவார். குற்றம் குறை ஏதுமின்றி அவ்வாண்டுச் சடங்கை தான் ஏற்றுக் கொண்டேன் என்று அம்மன் சொல்வதன் அடையாளமாக பணிமாறலை அடியவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

இறுதியாக அம்மன் குளுத்திலாடிய மஞ்சள் நீர் அடியவர்கள் மீது தெளிக்கப் பட்டு பொங்கல் பிரசாதம் வழங்கப்படுவ துடன் அவ்வாண்டுச் சடங்கு இனிதே நிறை வுறும். இறுதியாக கதவு அடைத்தல் எனும் மரபுடன், வண்ணக்கரை ஊர்வலமாக அவர் வீட்டுக்குக் கொண்டு சென்று விடுவதுடன், அன்றைய மரபுகள் முடிவடைந்து விடுகின றன. பின்னர் மூன்று நாள்களுக்குப் பின்னர் வெள்ளிக்கிழமையன்று நிகழும் ‘வைரவர் மடை’ எனும் சடங்குடன் கோவில் மீண்டும் உறங்குநிலைக்குச் செல்கிறது.

குளுத்தில் என்பது ஒரு கொண்டாட்டம். ஒரு பண்டிகை. பொங்கல், சித்திரைக்குக் கூட புத்தாடை தரிக்காதவர்கள், இதற் கென குடும்பமாக புத்தாடை வாங்கித் தரித்துக்கொள்வதைக் காணலாம். ஊரில் மங்கல நிகழ்வுகளோ அமங்கல நிகழ்வு களோ இந்நாள்களில் நிகழ்த்தப்படாமல் தள்ளிப் போடப்படுகின்றன. குறித்த கால வேளையில் யாரும் மரித்தால், அவருக் குரிய ஈமக்கிரியைகள் கூட முறைப்படி நிகழ்த்தப்படுவதில்லை. அந்த மரணத்தில் அம்மனே கலந்து கொண்டு அவர் ஆன்மா வைச் சிவலோகம் சேர்ப்பதாக நம்பிக்கை என்பதால், பூதவுடலை அகற்றும் வரை, கோயிலில் சடங்குகளும் நிகழ்த்தாமல் ஒத் திவைப்பார்கள். வைகாசி பொதுவாக திருமணத்துக்கான மாதம் என்பதால், குளுத்தில், தம் பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் – பெண் பார்க்கும் மையமாகவும் விளங்கியது.

சுயதொழில், சிறுதொழில் முனையும் உள்ளூரார் தம் உற்பத்திகளை காட்சிப்ப டுத்தவும், அதன்மூலம் குறைந்தபட்ச வருமானத்தைப் பெற்றுக் கொள்ளவும் உதவிய குளுத்தில், சமூகத்தின் பொருளாதார ஊக்க விப்பு அலகாகவும் விளங்கியது என்பதைக் காணலாம். இப்படி சமூக ஒருங்கிணைப்பு மையமாக ஊருக்கு ஊர் சிறப்புற்று விளங்கிய குளுத் தில், தம்பிலுவில்லில் மாத்திரமல்ல; இவ் வாண்டு கிழக்கிலங்கையின் சகல கண்ணகி கோவில்களிலும் சோபையிழந்தபடியே இடம்பெறுகிறது. வேறொன்றுமில்லை. கொரோனா அச்சுறுத்தல் தான். அடியவர்கள் கூடுவதில், திருவுலா நிகழ்த்துவதில், ஊர்வலம் செல்லுவதில், அனைத்திலும் கட் டுப்பாடுகள், வரையறைகள். கோயிலுக்குள் நிர்வாகத்தினர் தவிர பொதுமக்களும் அடிய வரும் நுழைவதில் இறுக்கமான விதிமுறை கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அப்படி நுழைபவர்களும் உரிய சுகாதார பழக்கவழக் கங்களைக் கடைப்பிடிக்கத் தூண்டப்படுவ துடன், சமூக இடைவெளியைப் பேணவும், இயன்ற விரைவில் கோவிலை விட்டு நீங்க வும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்ப்பண்பாட்டில் அம்மன்களுக்கும், கொள்ளைநோய்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அம்மன்கள் சீற்றம் மிகுந்தவர்கள் என்பதாலேயே நித்திய வழிபாடுகளின்றி அவர்களை ஆண்டுக்கொருமுறை மட்டும் அழைத்து வழிபட்டு, பின் வழியனுப்பி வைப்பதாக ஐதீகங்கள் சொல்கின்றன. கொரோனா போன்ற வெளிஅச்சுறுத்தல்களை விட மோசமாகஅதிகாரப்போட்டி, கௌரவ முரண்கள், சமஸ்கிருதமேல்நிலையாக்கம் முதலிய அக அழுத்தங்கள், தமிழ் மரபு மாறாதபாரம்பரியதாய்த்தெய்வவழிபாட்டில்மிகப்பெரும் தாக்கத்தைஏற்படுத்திவருகின்றன.சீற்றம் கொள்ளாமல் அவள் என்ன தான்செய்வாள்? இயற்கைச் சீற்றங்கள் மூலம் அவள் சொல்லும் செய்தி ஒன்றே. அவளாகமுற்றழிக்கமுன்நாமாகத் திருந்திக்கொள்வதுநல்லது.

-வி.துலாஞ்சனன் (SLAS)

தம்பிலுவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *