வாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் இயக்கும் பணி ஆரம்பம்

வாழைச்சேனை கடதாசி ஆலை மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டது, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச கடதாசி ஆலைக்கு (30 மே) விஜயம் செய்து இயந்திரங்களின் இயக்கங்களையும் உற்பத்தியையும் நேரில் பார்வையிட்டு திருப்தி தெரிவித்தார். அத்தோடு மற்றைய கடதாசி வகைகளின் உற்பத்திகளையும் விரைவாக ஆரம்பிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை தெரிவித்ததாக கடதாசி ஆலையின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் இதுப்ற்றி மேலும் தெரிவிக்கையில், கடதாசி ஆலையின் உற்பத்தி கடந்த 6 வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடதாசி ஆலை தனது உற்பத்தியின் ஒரு பகுதியான ”காடபோட்” உற்பத்தியை இப்போது ஆரம்பித்துள்ளது. இது இன்னும் ஓரிரு மாதங்களில் கடதாசி உற்பத்தியில் இறங்கிவிடும்.

எமது நாட்டின் கடதாசித் தேவையின் 78 விகித்தை இது நிறைவு செய்திருந்தது. இதனுடைய அப்போதைய ஆளணி 3000ம் ஆகும். இதன் திருத்த வேலைகளை பாதுகாப்புப் படையின் கடற்படை, இராணுவம் என்பன இந்திய பொறியியலாளர்களின் ஆலோசனையோடு நிறைவேற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *