கோமாரி சுற்றுலா பகுதி கடலரிப்பினால் காவு

அம்பாறை மாவட்டத்தில் கோமாரி மணற்சேனை லைட்ஹவுஸ் கடற்கரை பிரதேசத்தை மையமாக கொண்டு அமைந்துள்ள சுற்றுலா பகுதிகள் கடலரிப்பு காரணமாக அழிக்கப்படு வருகின்றன.

குறித்த கடற்கரை பிரதேசத்தில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஆரம்பிக்கப்பட்ட சுற்றுலா விடுதிகளும் அதனோடினைந்த பயன்தரு தென்னை மரங்களும் கடலரிப்பால் நாளாந்தம் காவு கொள்ளப்பட்டு வருகின்றன.

கடலானது சுமார் 25 மீற்றர் உள்நோக்கி நுழைந்துள்ளதையும் இதனால் அப்பகுதியில் நடப்பட்டிருந்த அழகு மிகு மரங்களும் பயன்தரு தென்னை மரங்களும் கண்முன்னே கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுவதும் கவலை தரும் விடயமாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஹோட்டல் உரிமையாளர்கள் கடலரிப்பு காரணமாக மற்றுமொரு சிக்கலையும் எதிர்கொண்டுள்ளனர். சிசிடி மற்றும் யுடிஏ யின் சட்டதிட்டங்களுக்கு அமைய 50 மீற்றருக்கும் அப்பால் அப்போது ஹோட்டல் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் தற்போது கடலரிப்பு காரணமாக கடற்பகுதி 25 மீற்றர் உள்நோக்கி நுழைந்துள்ளது.

அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வை பெற்றுக்கொடுத்து வளர்ச்சியடைந்துவரும் உல்லாசத்துறைக்கு கைகொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *