திருக்கோவிலில் மினி சூறாவளி
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வீசிய மழையுடனான மினி சூறாவளி காரணமாக திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் சந்தியில் அமைந்துள்ள வீடு மற்றும் வர்த்தக நிலையம் என்பன முற்றாக சேதமடைந்துள்ளன.
இத் திடீர் அனர்தமானது நேற்றுமுன்தினம் (17) இடம்பெற்று இருந்ததுடன் மழையுடன் வீசிய பலத்த காற்றில் சிக்குண்டு வீடு, வர்த்தக நிலையம் முற்றாக சேதடைந்துள்ளதாக உரிமையாளர் பாலசுந்தரம் பத்மா தெரிவித்தார்.
இவ் அனர்த்தம் ஏற்பட்ட வேளை கடைக்குள் தேனீர் அருந்துவதற்காக பலர் இருந்ததாகவும் திடீரென பாரிய சத்தத்துடன் கடை மற்றும் வீட்டின் கூரையின் சீட்டுக்கள் வீதியில் வீசப்பட்டதுடன் யாருக்கும் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இன்றி தெய்வாதீனமாக தப்பித்துக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.
மினி சூறாவளி அனர்த்தம் காரணமாக வீடும் மற்றும் வர்த்தக நிலையம் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் அப்பகுதி கிராம உத்தியோகத்தர் மற்றும் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கும் தகவல் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். கடைக்குள் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்
